top of page

“Give all your worries and care to God,
                for he cares about you.”

1 Peter 5:7

THOODHU TV

Anchor 1

Nguhah; jpdj;J}J uh[h mth;fspd; jhprdk;

பேராயர் தினத்தூது ராஜா அவர்கள், 1992 ஆம் ஆண்டு முதல் தனது அனுபவ சாட்சியோடு தேவனுடைய நாமத்தை சுவிசேஷகராகப் பிரகடனப்படுத்தி வந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டில், அவர் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டு, சபை ஊழியங்களையும் சுவிசேஷ ஊழியங்களையும் இணைத்துச் செய்து வந்தார்.

2006 ஆம் ஆண்டில், அவரது தந்தையும் பிரதான பேராயருமான டாக்டர் G. ராஜகுமார் அவர்களின் மறைவுக்குப் பின், அனைத்துக் கிளைச் சபைகளின் போதகர்கள், விசுவாசிகள், அவரது தாயார் மற்றும் சகோதரர்களால் அவர் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி, மறைந்த திரு. டாக்டர் D.G.S. தினகரன் அவர்களின் தலைமையில், பேராயர் டாக்டர் தயானந்தன் அவர்களால் பேராயராக அபிஷேகம் பெற்றார்.

அதுமுதல், ஆயிரம் திருச்சபைகளை ஸ்தாபிக்கும் தரிசனத்தோடு தனது பணியை நிறைவேற்றி வருகிறார். ஏழை எளியவர்கள், திக்கற்ற பிள்ளைகள் மற்றும் தேவனை அறியாத பிள்ளைகளுக்காகத் தெய்வபயத்தோடும் ஆத்தும பாரத்தோடும் பணியாற்றி வருகிற பேராயர் தினத்தூது ராஜா அவர்கள், தேவனுக்காக அதிகம் பிரயாசப்பட்டு ஊழியம் செய்துவருகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கண்ட அவர், இன்னும் அதிக தரிசனத்தோடு தேவனுக்காகச் செயல்பட்டு வருகிறார். பேராயர் தினத்தூது ராஜா அவர்கள் இரண்டு கல்வி ஸ்தாபனங்களுக்குத் தலைவராக இருந்து, பெற்றோர்களுக்காகவும் அதிகமாய் உழைத்து வருகிறார்.

ஆயிரம் திருச்சபைகளை ஸ்தாபிக்கும் தரிசனத்தோடு ஊழியம் செய்து வரும் பேராயர் தினத்தூது ராஜா அவர்கள், தனது ஊழியத்தில் தொலைக்காட்சி ஊழியத்தையும் ஸ்தாபிக்கும் தரிசனத்தோடு, இந்தத் 'தூது' தொலைக்காட்சியை இந்த நாள் (அக்டோபர் 8, 2016) முதல் துவங்கி மகிழ்ச்சி அடைவதுடன், விரைவில் தேவனுடைய கிருபையால் 'தூது' தொலைக்காட்சியை உலகத்திற்குக் கொண்டுவரவும் பிரயாசப்படுகிறார். மேலும், கிராம ஊழியங்கள், ஊழியர் ஐக்கியங்கள், இயேசுவின் தோட்டம் ஸ்தாபித்தல், அக்கினி அபிஷேக வல்லமை முகாம் ஸ்தாபித்தல் போன்ற தரிசனங்களை, தன் குடும்பத்தாரோடும் விசுவாசிகளோடும் இணைந்து தேவனுடைய கிருபையால் நிறைவேற்றப் பிரயாசப்பட்டு வருகிறார்.

Bishop Thina Thoodhu Raja
01
02
Final logo.png

Live & 24/7

03

Kindly pray for the ministry and uphold the ministry
by your offering as the lord leads.

7126a7dd0ca14dd69dc17268e78c33dd.avif
458722968

Account Name -

saint john's church trust 

Account Number -

IDIB000E001

IFSC code -

E.r.a puram, CSM Plaza, Old No-45,
New No-34, Venkatakrishna Road,
Mandavelipakkam,Chennai-600028

Branch -

Gpay number -

7397475900
05

Address

196, Ramakrishna Mutt Rd, Mandaveli,

      Chennai - 600028, Tamil Nadu

​+91 7397475900

For Prayer Request

  • Instagram
  • Facebook
  • YouTube

© Copyright 2018 Thoodhu TV

04
bottom of page